Breaking News

இப்படி செஞ்சிட்டாரே..? நயன்தாராவை திட்டி தீர்க்கும் இளம் நடிகைகள்..!


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திட்டி தீர்த்து வருகின்றனராம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள்.

திரையுலகில், கட் அவுட், பாலாபிஷேகம் என நாயகர்களுக்கு இணையான அந்தஸ்துடன் வலம்வருபவர் நடிகை நயன்தாரா. கவர்ச்சியான கதாபாத்திரங்களை தாண்டி நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும், கதைகளை தேடி தேடி செலக்ட் செய்து நடித்து வரும் இவரால், இளம் நடிகைகளுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்புகளும் பறிபோகிறதாம்.

Also Read | 'சீதையாவும் நடிப்பார் கூப்பிட்டாலும் போயிடுவார்'... நயன்தாராவை விளாசிய ராதாரவி

அருமையான கதையுடன் வந்தால் இளம் இயக்குனர்களையும் தேர்வு செய்து விடுகிறார்கள் என்கிற காரணத்தினால், திறமையான அறிமுக இயக்குனர்களும் இளம் நடிகைகளை விட்டு விட்டு நயன்தாராவின் பக்கம் சென்று விடுகின்றனராம்.

ஒரு சிலரோ, இளம் நடிகைகளை ஒப்பந்தம் செய்து விட்டு, நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டது எனக்கூறி, அவர்களை பாதியிலேயே கழட்டியும் விட்டுவிடுவதால், நேரடி காரணமாக அமையாவிட்டாலும் நயன்தாராவை திட்டி தீர்த்து வருகின்றனராம் இளம் நடிகைகள்.