Breaking News

விபரீதத்தில் முடிந்த 'விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டங்கள்' - முகம் சுளிக்க வைத்த அஜித் ரசிகர்கள்

#Viswasam #50thDay #AjithFans #Misbehaviour

#Viswasam #50thDay #AjithFans #Misbehaviour 
 
நடிகர் அஜித்தோ, எந்த வம்பு தும்புக்கும் போகாமல், தான் உண்டு தன் நடிப்பு உண்டு என இருந்து வருகிறார். அவரது தன்னடக்கத்தை ஒட்டுமொத்த திரையுலகமே பாராட்டி வருகிறது.

ஆனால் அப்பேற்பட்ட நடிகரின் சில ரசிகர்களின் செயலோ, அப்படியே நேர் எதிராக இருந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் தகாத முறையில் பேச்சு, அடிதடி என குறிப்பிட்ட சில ரசிகர்களின் செயல், சமூக சேவைகள் செய்யும் சிலரையும் சேர்த்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் பெயரையே சீர்குலைத்து வருகிறது.

இப்படி இருக்க விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்ட சிறப்பு காட்சியிலும்,  தங்களது கைவரிசையை காட்டி 'இனி சிறப்பு காட்சிகளே கிடையாது' என தியேட்டர் உரிமையாளர்கள் கூறும்படி செய்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

விஸ்வாசம் திரைப்படத்தின் 50வது நாள் காட்சிகள் நேற்று தமிழகமெங்கும் சுமார் 124 திரையரங்குளில் திரையிடப்பட்டது.அவற்றுள் சென்னையிலுள்ள பிரபல ரோகினி திரையரங்கும் அடக்கம்.

இந்நிலையில், சிறப்பு காட்சியின் போது ரசிகர்கள் சிலர் அத்திரையரங்கின் ஸ்க்ரீனை கிழித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட அத்தியேட்டரின் நிர்வாகி, இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும் வரை இனி சிறப்பு காட்சிகளே கிடையாது என அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.