Breaking News

உயிரையும் பணையம் வைத்த விஜய்..!!! ஆனால் அஜித்..??? கிளம்பிய சர்ச்சை


படப்பிடிப்பில் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி கால்வாயை தாண்டி எகிறி குதித்து நடக்கிறார் விஜய். அவர் நெருங்கி வர வர, இரும்பு வேலியின் பின் நின்ற ரசிகர்களிடையே நெரிசல் அதிகரிக்கிறது. நேரம் செல்ல செல்ல ரசிகர்களின் எடை தாங்காது வெளியும் சரிய துவங்குகிறது.

இதனை கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், சுதாரித்துக் கொண்ட விஜய் ஆளுக்கு முன் ரசிகர்களை காப்பாற்ற விரைகிறார். வேலியை தாங்கி பிடிக்கிறார். விஜயை தொடர்ந்து அவருடன் இருந்த சக பணியாளர்களும் தாங்கி பிடிக்க, நெரிசலில் சிக்கி படுகாயம் அடைய இருந்த ரசிகர்கள் அதிர்ஷ்ட வசமாக தப்பிக்கின்றனர். 

இந்த சம்பவத்தில் நிஜ ஹீரோவாக பார்க்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் நடிகர் விஜய். அதே சமயம்,அவருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தினை உடைய அஜித், சமீபத்திய நடவடிக்கைகளினால்  ஒரு சில விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.


இப்பொழுதெல்லாம் ரசிகர்களை பொது வெளியில் கண்டால், பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார் அஜித். புகைப்படம் எடுக்க மறுப்பது, ஒரு புன்முறுவல் கூட இல்லாமல் ரசிகர்களைஅஜித் கடந்து செல்வது, அவரது ஆணிவேரான ரசிகர்களை வருத்தப்பட வைத்தாலும், தல தலதான் என விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.