Breaking News

விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்... பரபரப்பை கிளப்பும் விஜே அஞ்சனா


பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து பிரபலமானவர் விஜே அஞ்சனா. இவர் நடிகர் விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்ட நெகிழ்ச்சியான தருணம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,  'விஜய் அவர்கள் நடித்திருந்த புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அது. அவ்வளவு பெரிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு அதுவே முதல் முறை.

அந்நிகழ்வில், நடிகர் விஜய் மிகவும் ஆவேசமாக பேசி இருந்தார். அதனை கண்டு அனைவரும் மிரண்டு போய் இருந்தனர். அப்பொழுது விருந்தினர் ஒருவருக்கு விஜய் அவர்களை விருது வழங்க அழைக்குமாறு எனக்கு உத்தரவு வந்தது.

நானும் அவரை அழைத்தேன். ஆனால் என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை, நான் பேசியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் எழுந்து சென்று விட்டார். இதனால் நான் தான் ஏதோ சொல்லி அவரை கோபப்படுத்தி விட்டதாக அனைவரும் என்னை திட்டி தீர்த்தனர்.

ஆனால் அடுத்த நாளே எதிர்பாராத விதத்தில், விஜய் அவர்களின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில் நடிகர் விஜய், 'நேற்று நீங்கள் ஏதோ கூற வந்தீர்கள். நான் வேறு சிந்தனையில் இருந்ததனால் கேட்கவில்லை. மன்னித்து கொள்ளுங்கள்' எனக்கூற மிரண்டு போய் விட்டேன்.

இவ்வளவு பெரிய மனிதர், இந்த சிறிய நிகழ்வுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்பதற்கெல்லாம் அவசியமே இல்லை. இருந்தாலும் அவர் கேட்டத்து அவரது எளிமையான மனநிலையை காட்டுகிறது என புகழ்ந்து தள்ளியிருந்தார்.