Breaking News

இப்படியும் உதவலாம்...! விஜயின் செயலால் குவியும் பாராட்டுக்கள்


சமூக அக்கறை கொண்ட நடிகர் விஜயின் நடவடிக்கைகள் பலமுறை மக்களின் கவனத்திற்கு வந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது இணைந்திருக்கிறது சினிமா தொழிலாளர்கள் மீது அவர் கொண்ட அக்கறையால் செய்த காரியம்.

தமிழ் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஃபெப்சி ஊழியர்கள், தமிழகத்தில் நடைபெறும்  படப்பிடிப்புகளை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மூலம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் இவர்களின் திரைப்பட படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் நடைபெறும் போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதும்  இந்த ஊழியர்கள்தான்.


இப்படியொரு பாதிப்பு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறாராம் நடிகர் விஜய். இதனாலேயே தமிழகத்தில் படப்பிடிப்புகள் நடத்தினால் ரசிகர்களால் இடையூறு ஏற்படும் என தெரிந்தும், முக்கியமான ஒரு சில காட்சிகளை தவிர, தன் பெரும்பாலான திரைப்பட காட்சிகளை தமிழகத்திலேயே நடத்த படக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கிறாராம் விஜய்.

தளபதி 63 திரைப்பட படக்குழுவிடமும் இதே வேண்டுகோள் விடுத்த விஜயின் செயலை அறிந்த, ஃபெப்சி ஊழியர்கள் மற்றும் பிற திரையுலகினர், தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.