Breaking News

முன்னணி நடிகர்களுக்கு தைரியம் இல்லையா..? போட்டுத்தாக்கிய வரலட்சுமி


வில்லி வேடமானாலும் நாயகிகளை மிஞ்சும்படி நடித்து அசத்தி வருபவர் நடிகை வரலக்ஸ்மி. பெரும்பாலான நாயகிகளை போல நடித்தோம் சென்றோம் என்றில்லாமல், சமூக பிரச்சனைகளுக்கும் குரல்கொடுக்கும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

திரைத்துறை பெண்களின் பாதுகாப்பிற்காக, சேவ் சக்தி எனும் அமைப்பையும் நடத்தி வரும் இவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து அண்மையில் பேசி இருந்தார்.

அதில் கொஞ்சம் ஆவேசமாகவே பேசி இருந்த அவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சமூக அக்கறை இன்மை குறித்தும் விமர்சித்து இருந்தார்.   

Also Read | கண்டு கொள்ளாத தமிழ் நடிகைகள்...! களத்தில் இறங்கும் ஸ்ரீ ரெட்டி..! குவியும் பாராட்டுக்கள் 

அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் இந்த பொள்ளாச்சி விவகாரம் குறித்து வாய் கூட திறக்கவில்லை. மிகப்பெரும் ரசிகர் படையை கொண்டிருக்கும் அவர்களுக்கு சமூக பொறுப்பும் இருக்கிறது.

திரைத்துறையில் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட #MeToo குற்றச்சாட்டுகள் குறித்து கூட அவர்கள் பேசவில்லை, இதுபோன்று பேச வேண்டிய இடங்களில் இந்த மாபெரும் சக்திகள் பேச தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.' என முன்னணி நடிகர்களின் தைரியமின்மை குறித்து மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.