Breaking News

'உடம்பை காட்டுனாதான் சம்பளம்னு சொல்றாங்க'... வரலக்ஸ்மி காட்டம்


வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் தனது நடிப்பு திறமையினால், திரைத்துறையில் நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார் நடிகை வரலக்ஸ்மி.

நாயகியாக நடித்தது என்னமோ ஒரு சில திரைப்படங்கள்தான் என்றாலும், அதில் கிடைக்காத பெயரும் புகழும் வில்லியாக இவர் நடித்த, சர்கார், சண்டைக்கோழி ஆகிய திரைப்படங்கள் மூலம் கிடைத்துவிட்டன.

இதனால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படவாய்ப்புகளும் அம்மணியை தேடி செல்கின்றன. இதே சாக்கில் தனது சம்பளத்தையும் இரட்டிப்பாக்கி இருந்தார் வரலட்சுமி.

ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்களோ, புதிய சம்பளத்தை காரணம் காட்டி தலைதெறித்து ஓடுகின்றனராம்.
இது குறித்து தனது நட்புவட்டாரங்களிடம், 'ஒண்ணுமே செய்யாமல் கவர்ச்சியில் உடம்பை காட்டிவிட்டு செல்பவர்களுக்குத்தான் சம்பளத்தை வாரிவாரி வழங்குகின்றனர்' என புலம்பி தள்ளி வருகிறாராம்.