Breaking News

'அரசியலில் தலையிடனும்'... அரசியல்வாதிகளை அலறவைக்கும் 'உறியடி-2' டீசர்..!


சினிமாவில் எந்தவித அறிமுகமும் அற்ற இளம் இயக்குனர், படக்குழு, நடிகர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் உறியடி.

போதிய விளம்பரம் இல்லாத காரணத்தினால் ஆரம்பத்தில் மக்களை சென்றடையவில்லை என்றாலும், ரசிகர்களின் வாய்வழி விளம்பரத்தினால் மாபெரும் புகழை அடைந்தது இத்திரைப்படம்.

இந்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இம்முறை, நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு பிரமாண்டமாக உருவாகியுள்ளது இதன் இரண்டாம் பாகம்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின், 'அரசியலில் நாம தலையிடனும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில் தலையிடும்' என்கிற வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.