Breaking News

அடுத்த ஜெயலலிதா நான் தான்....! முன்னணி நடிகையின் அரசியல் ஆசை


திரைத்துறையில் நடிகையாக இருந்து, தமிழக அரசியல் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய முதல்வராக விளங்கியவர் ஜெயலலிதா அவர்கள்.

அவரது மறைவுக்கு பின்னர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் அரசியலில் களம்கண்டுவிட்ட நிலையில், பிரபல நடிகை ஒருவருக்கும் அந்த ஆசை துளிர் விட்டிருப்பதாக கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

நடிப்பில் இவர்தான் கில்லி என தனது உழைப்பினாலும் அனுபவத்தினால் நிரூபித்துவிட்ட குறிப்பிட்ட நடிகைக்கு, நாயகர்களுக்கு இணையான அந்தஸ்தும் ரசிகர்களிடையே உள்ளது.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவரான அந்த நடிகை, அண்மையில் தனது நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ஒருவரிடம் தனது எதிர்காலம் குறித்து வினவ, அரசியலிலும் சினிமாவை போலவே சிறந்து விளங்குவீர்கள் என்றிருக்கிறார் அவர்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்த நடிகை, சினிமாவில் முடிந்த வரை நல்ல பெயரை சம்பாதித்துவிட்டு, பின்னர் அரசியலில் களம்காணலாம் என்ற முடிவையும் எடுத்திருக்கின்றாராம்.