Wednesday, 27 March 2019

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் யார்..? பின்னுக்கு தள்ளப்பட்ட ரஜினி...! டாப் 5 லிஸ்ட் இதோ


சினிமாவில், நடிகர்களின் மதிப்பு ரசிகர்களிடம் இருக்கும் அந்ததஸ்தை விட அவர்களின் படங்கள் கொடுக்கும் வசூலினை பொறுத்தே கணக்கிடப்படுகிறது . 

அதன் அடிப்படையில் நடிகர்களும் தங்களது சம்பளத்தை ஏற்றுவது இறக்குவது போன்ற முடிவுகளை எடுப்பர். அப்படி சமீப கால திரைப்படங்களின் வெற்றி மற்றும் வசூலின் அடிப்படையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் குறித்த லிஸ்டினை வெளியிட்டு இருக்கிறார்.

குறிப்பிட்ட லிஸ்டில், தெறி, மெர்சல், சர்கார் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் முதல் இடத்திலும், விஸ்வாசம் எனும் சூப்பர் ஹிட் கொடுத்த அஜித் இரண்டாவது இடத்திலும், 2.0, பேட்ட வெற்றிப்படங்களாக அமைந்தும் எதிர்பாராத வசூலை கொடுக்காத நிலையில் ரஜினி 3வது இடத்திலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் 4வது மற்றும் 5வது இடத்திலும் உள்ளனர்.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();