Breaking News

அவருடன் என்றால் முத்தக் காட்சிக்கு ரெடி... தமன்னாவின் புதிய ஆஃபர்


முத்தக்காட்சி, பிகினி உடையில் தோற்றம் இவற்றை கோடி ரூபாய் கொடுத்தாலும் திரைப்படங்களில் செய்யமாட்டேன் என ஒற்றை காலில் நிற்பவர் நடிகை தமன்னா.

இப்படி இருக்க அந்த நடிகருக்கு மட்டும் தன் முத்தக்காட்சி நிபந்தனையை தளர்க்க தயாராக இருப்பதாக கூறி பலரை வியப்பிலும் சிலரை வயிற்றெரிச்சல் படவும் வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை தமன்னா கலந்து கொள்ள, முத்த காட்சி குறித்த கேள்வியானது கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தமன்னா, 'நான் ஹ்ரித்திக் ரோஷன் அவர்களது மிகப்பெரும் ரசிகை. 16வயதில் அவரை முதன் முதலில் சந்தித்த போது, என்ன செய்வதென்றே தெரியவில்லை.


அவரே என்னிடம் புகைப்படம் வேண்டுமா எனக்கேட்டு, திகைத்து நின்ற என்னை தெளிவு படுத்தினார். அவருடன் முத்தக்காட்சியில் நடிப்பது குறித்த தோழிகளுடனான பேச்சும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது' என குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடைய செய்திகள் 

 சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? அடுத்தடுத்து வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள்