Breaking News

கண்டு கொள்ளாத தமிழ் நடிகைகள்...! களத்தில் இறங்கும் ஸ்ரீ ரெட்டி..! குவியும் பாராட்டுக்கள்


தமிழில் சினிமயி #metoo புகார்களை அள்ளி குவிப்பதற்கு முன்பாகவே, தெலுங்கு திரையுலகை பாலியல் புகார்களால் புரட்டி போட்டவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தற்பொழுது தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து பேசி  வீடியோ வெளியிட்ட அவர், 'விரைவில் சென்னை வந்து காவல்துறையினரையும் அரசியல்வாதிகளையும் சந்தித்து இது குறித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களுடனும் பேச விரும்புகிறேன்.


7 வருடங்களாக நடந்த இந்த கொடூரம் குறித்து ஒருவரும் புகார் அளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் தைரியமாக பேசினால்தான் இவ்வகை பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களுக்காக நான் களத்தில் இறங்கி போராட இருக்கிறேன்' என பேசி இருந்தார்.   

ஸ்ரீ ரெட்டியின் இவ்வகை நடவடிக்கைகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காகவே என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான தமிழ் நடிகைகளே தமிழ் பெண்களுக்கு குரல்கொடுக்காத நிலையில், வேறு மொழி நடிகை ஒருவர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.