Breaking News

"200 பெண்கள் சீரழிய நீங்க தான் காரணம்" சிம்புவை தாளித்து எடுக்கும் மக்கள்



பொள்ளாச்சியில் அரங்கேறிய காம வெறியர்களின் வெறியாட்டத்திற்கு சிம்புவும் ஒரு காரணம் என பொங்கி எழுந்துள்ளனர் தமிழக மக்கள்.

முன்னதாக இந்த குலைநடுங்க வைக்கும் சம்பவத்திற்கு தனது கடும் கண்டனத்தினை தெரிவித்து இருந்தார் நடிகர் சிம்பு. மேலும் ஆண் பிள்ளைகளை பெண்களை மதித்து நடக்க பெற்றோர் தான் கற்று கொடுக்க வேண்டும்.

விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை தொடுவது, தனது அன்னையை தொடுவதற்கு சமம் என சொல்லி வளர்க்க வேண்டும். என தன்னுடைய பாணியில் புதிய வழியையும் கூறி இருந்தார்.

Also Read | பீச்சில் மேலாடையுடன் ஆட்டம்..! அமலாபாலை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள்

இதற்கு ஒரு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பலர், 'முதலில் நீங்கள் திரைப்படங்களில் ஒழுங்காக நடியுங்கள். நடிகைகளை காட்சி பொருளாக பயன்படுத்துவதை தவிருங்கள்.

நடிகைகளை லிப் கிஸ் அடிக்கும் பொருளாக பயன்படுத்தி விட்டு, அதையே பெருமையாக சொல்லி கொள்கின்றீர்கள். அதனை பார்க்கும் ரசிகர்களும் பெண்களுடன் தவறாக நடந்து கொள்வது தான் மாஸ் என தவறான பாதைக்கு இழுத்து செல்லப்படுகின்றனர்.

மொத்தத்தில் பொள்ளாச்சியில் 200 பெண்கள் சீரழிய நீங்களும் ஒரு முக்கிய காரணம்' என கருத்துக்களால் சிம்புவை தாளித்து எடுத்து வருகின்றனர்.