Breaking News

சர்கார் திரைப்பட எதிரொலி.... இனிமேல் கள்ள ஓட்டிற்கு குட்பாய்..!


சர்கார் திரைப்படம் ஏற்படுத்திய கள்ள ஓட்டு பிரச்சனை விழிப்புணர்வின் காரணமாக தற்பொழுது தேர்தல் ஆணையமே, நடிகர் விஜய் வழியை கடைபிடிக்க துவங்கியுள்ளது.

A.R. முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து சென்ற வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் சர்கார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்த இந்த சர்கார், தான் சொல்ல வந்த கருத்தினை கச்சிதமாக சொல்லி, தற்பொழுது நிஜ வாழ்விலும் நடைமுறை படுத்தி, இதுதான் உண்மையான வெற்றி என நிரூபித்து காட்டி இருக்கிறது.

ஆம் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கள்ள ஓட்டிற்கு எதிரான செக்சன் 49Pயினை  இனி வரும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்தும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன் படி, இனிமேல் கள்ள ஓட்டினால் தங்களது ஓட்டுரிமையை தவற விட்டவர்கள், போதுமான அடையாள ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் மீண்டும் வாக்களிக்கலாம் என்ற தகவலை இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரப்படுத்தி வருகிறது.


இதனால் தேர்தலில் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வந்த, கள்ள ஓட்டு போடும் முறையே அடியோடு அழியும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இப்படி ஒரு திரைப்படத்தினால் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்து காட்டி இருக்கிறது சர்கார். உண்மையிலேயே இதுதான் மாபெரும் வெற்றி...!       

தொடர்புடைய செய்திகள்

படப்பிடிப்பே முடியல.. ஆனாலும் விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளிய 'தளபதி 63'