Breaking News

'நாய் கடிச்சி குதறிடுச்சா...?' ரித்திகாவின் கந்தல் உடையை கலாய்த்த நெட்டிசன்கள்


இறுதி சுற்று எனும் திரைப்படத்தின் மூலம் குத்துசண்டை வீராங்கனையாக இருந்து முழு நேர நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி எனும் நிலையில், உச்ச நடிகையாக திரையுலகை ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

என்றாலும் அவர் தொடர்ந்து நடித்த, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய திரைப்படங்கள் வசூலில் மண்ணை கவ்வ, பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

Also Read | 55 வயதில் இவ்வளவு அழகா.? நடனமாடி கவர்ந்த அம்பானியின் மனைவி  

இப்படியே போனால் சரிப்பட்டு வராது என எண்ணிய அவர், பெரும்பாலானா நாயகிகளை போல சமூக வலைத்தளங்களில் தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் வழக்கம் போல மாடர்ன் உடையில் தான் தோன்றிய புகைப்படத்தினை அவர் வெளியிட, புகழ்ச்சிகளுக்கு பதிலாக கிண்டல்கள் வந்து குவிந்து வருகின்றன.

அவர் அணிந்து போஸ் கொடுத்திருந்தது என்னமோ மாடர்ன் உடை தான் என்றாலும், கிழிந்த துணிகளை கோர்த்து வைத்தது போல காட்சியளித்ததால், 'உங்க நாய் கடிச்சி கொதறிடிச்சோ?' என கலாய்த்து தள்ளிவருகின்றனர் ரசிகர்கள்.