Breaking News

ஆபாச காட்சிக்கு '37 டேக்'... இயக்குனரை அலறவிட்ட ராஜமாதா...!


பாகுபலி திரைப்படத்தில் கிடைத்த பிரபலத்திற்கு பின் இந்த வயதிலும், இளம் நாயகிகளுக்கு இணையான சம்பளம் பெற்று நடித்து வரும் மூத்த நடிகை ரம்யா க்ரிஷ்ணன்.

நாயகி வாய்ப்புகள் பறிபோன பின்னர், டிவி சீரியலே கதி என கிடந்தவருக்கு பாகுபலியால் அதிர்ஷ்டம் அடிக்க இப்பொழுது அடுத்தடுத்து, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பழசை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, கிளாமர் காட்டும் வேடங்களிலும் நடித்து வரும் இவர், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச திரைப்பட நாயகியாவே நடித்திருக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில், இவர் இடம்பெற்றிருக்கும் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிக்காக படாத பாடு பட்டிருக்கின்றனர் படக்குழுவினர். படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நினைத்தபடி துல்லியமாக படமாக வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாய் இருந்திருக்கிறார் இயக்குனர் 'தியாகராஜன் குமாரராஜா'.

இதே துல்லியத்தை, குறிப்பிட்ட கவர்ச்சி காட்சியிலும் இயக்குனர் எதிர்பார்க்க, சுமார் 37 டேக்குகளுக்கு பின்னும் அசராது நடித்து கொடுத்து, இயக்குனர் மற்றும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளி இருக்கிறார் ராஜ மாதா.