Breaking News

'தலயும் இல்ல தளபதியும் இல்ல' இங்க ரஜினிதான் கிங்... புகழும் திரையரங்கம்


ரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம்தான் தாங்கள் வெளியிட்ட படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த திரைப்படம் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது சென்னையை சேர்ந்த பிரபல திரையரங்கம்.

உலக அளவில் சூப்பர் ஸ்டாரின் வசூல் சாதனையை எட்ட தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்றாலும், தமிழக அளவில் அவரை விஜய் மற்றும் அஜித் எப்பொழுதோ கடந்துவிட்டனர்.

சொல்லப்போனால், தமிழகத்தை பொறுத்தவரை விஜய், அஜித்தை அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறார் ரஜினி. இதனை பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனே பல இடங்களில் கூறி இருக்கிறார்.

இப்படியொரு சூழ்நிலையிலும், 'இதுவரை தாங்கள் வெளியிட்ட திரைப்படங்களில் அதிக வசூலை கொடுத்த திரைப்படம் என்றால் அது, ரஜினியின் 2.0 திரைப்படம்தான்' என அறிவித்து அவரை கொண்டாடி இருக்கிறது பிரபல வெற்றி திரையரங்கம்.