Breaking News

ராதாரவியை திட்டி தீர்க்கும் சொந்த பந்தங்கள்... நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை படு கேவலமாக விமர்சித்து இன்று பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தார் நடிகர் ராதாரவி.

நயன்தாராவின், கொலையுதிர் காலம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே நடந்த இந்த நிகழ்வால், நயன்தாராவின் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை கீழ்த்தரமாக பேசி இருந்த அவருக்கு, தனது சொந்த பந்தங்களிடம் இருந்து கூட எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ராதாரவி அவர்களின் தங்கையான நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் மகள் வரலக்ஸ்மி உள்ளிட்டோரும் தங்களது குடும்ப உறுப்பினர் குறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருக்கின்றனர்.

நடிகை ராதிகா, 'நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன், முழுமையாக என்ன நடந்து என தெரியாவிட்டாலும், எனது சகோதரரின் செயல் தவறு என கண்டித்தேன்' என பதிவிட்டு இருந்தார்.


வரலக்ஸ்மியோ ஒருபடி மேலே போய், நடிகைகளை காட்சிப்பொருளாக பார்ப்பது, அவமதித்து கிண்டல் செய்வது எல்லாம் திரையுலகில் சகஜமாக உள்ளது. இது தவறு என கண்டிக்காத முந்தைய தலைமுறை பிரபலங்களால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது. இது தான் எங்கள் நிலை, எனக்கூறி தனது மாமாவின் நடத்தையினால் பாதிப்பு அவருக்கும் தான் என்று நெத்தியடியாக தெரிவித்து இருக்கிறார்.