Monday, 25 March 2019

இப்படி நடக்கும்னு எதிர்பாக்கவே இல்ல..! மனம் வருந்தும் ராதாரவி


நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் நடிகர் ராதாரவி முதன் முறையாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள கொலையுதிர் காலம் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், நயன்தாராவை மிகவும் தரக்குறைவாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார் ராதாரவி.

இதற்கு முன்னதாக பாடகி சின்மயி உள்ளிட்ட பல நாயகிகளை  தரக்குறைவாக பேசி இருந்தாலும் எந்தவித பிரச்னையும் இன்றி திரையுலகில் வலம்வந்தார் ராதாரவி.

ஆனால் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தையும், நடிப்பில் மாபெரும் புகழையும் கொண்ட நயன்தாராவை பேசிவிட்டு அப்படி தப்பி சென்று விட முடியவில்லை.

இந்த விவகாரத்திற்கு பின் ராதாரவிக்கு, ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் கிளம்பி இருந்த பட்சத்தில், படவாய்ப்புக்கள், அரசியல் பதவி என அனைத்தையும் இழந்து நிற்கிறார் ராதாரவி.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், நான் கூறவந்ததை மக்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். என்னால் திமுக கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' என பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();