Breaking News

'தங்கம் போல தகதகனு மிண்ணுறீங்க'... ரசிகர்களை கவர்ந்த நடிகை ப்ரணீதாவின் உடை


உதயன், சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்தவர் ப்ரணிதா சுபாஷ். என்னதான் நினைத்தபடி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வர இயலவில்லை என்றாலும், ஒரு தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு.

தற்பொழுது தமிழ் சினிமாவில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் இவர், மீண்டும் நாயகி வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, பெரும்பாலான நடிகைகளை போல திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கண்ணைக் கவரும் விதத்தில் உடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருகிறார்.
அதன் பலனாக பலரது கவனத்தையும் இவர் ஈர்த்தும் வருகிறார். இந்நிலையில் 'மிஸ் இந்தியா தெற்கு' நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொள்ள இவர் அணிந்து சென்ற தங்க உடை, பேஷன் விரும்பிகளின் விவாதப்பொருளாகி இருக்கிறது.     

தொடர்புடைய செய்திகள்

சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? அடுத்தடுத்து வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள்