Sunday, 24 March 2019

ராதாரவியின் பேச்சு..! ஒரே பதிலால் போட்டு தாக்கிய நயன்தாரா


ராதாரவி தன்னை கொச்சையாக பேசிய விவகாரத்தில், நயன்தாராவின் கருத்து என்ன என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள கொலையுதிர் காலம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாயகி நயன்தாராவை பற்றியே கொச்சையாக பேசி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இதற்கு, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. என்றாலும் நாயகி நயன்தாராவோ இது குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.

'குறிப்பிட்ட படத்தின் ப்ரமோஷனுக்கு அவர் வரவில்லை' என்ற ஒரே காரணத்திற்காக இப்படி சரமாரியாக விளாசிய ராதாரவி குறித்து, நடிகை நயன்தாரா தனது நட்பு வட்டாரங்களிடம், 'என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டார்.

இதற்கு கருத்து தெரிவித்து என்னை நான் அசிங்கப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை' என நெத்தியடி பதிலை தெரிவித்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();