Saturday, 30 March 2019

தீர்ந்த மோகம்... நூறே நாளில் விவாகரத்து... பிரியும் 'ப்ரியங்கா நிக்ஜோனாஸ்' தம்பதி?


நட்சத்திர தம்பதிகளிலேயே மிகவும் கோலாகலமாக நடைபெற்ற, ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ்  தம்பதி விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் பாலிவுட்டை வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்து, ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலை நாட்டி கொண்டிருந்த நடிகை பிரியங்கா சோப்ரா சென்ற வருடம், 25 வயதான அமெரிக்க பாடகரான நிக்ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்ற வருடம் டிசம்பர் மாதம், ஜோத்பூரில் உள்ள 'ராயல் உமைத் பவன் பாலசில்' 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணம் ஒட்டுமொத்த சினிமா உலகையே பிரமிக்க செய்து இருந்தது. 



இந்நிலையில், பிரபல அமெரிக்க ஊடகமான 'gossip.com' வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதுமண தம்பதிகளுக்கிடையேயான  உறவு, பிரிவின் விளிம்பில் இருந்து வருவதாகவும், காதலிக்கும் போது கனிவான இனிமையான ஒருவராக இருந்த ப்ரியங்கா, திருமணத்திற்கு பின்னர்தான் தனது கட்டுப்படுத்தும் எண்ணம், எதெற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் ஆகியவற்றை  நிக்ஜோனாஸிற்கு காட்டி இருப்பதாகவும்தெரியவந்துள்ளது.

மேலும், 'அனைத்தையும் புரிந்து கொள்ளும், பெண்மணியாக குழந்தை பெற்று குடும்பத்தை கவனித்து கொள்ளும் பெண்ணாக இருப்பார்' என எதிர்பார்த்த நிக்கின் குடும்பத்தினருக்கும், 21 வயது பெண்ணை போல குடி, கூத்து என இருந்த மருமகளின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போக, ப்ரியங்கா சோப்ராவை விவாகரத்து செய்ய கூறி வற்புறுத்தி வருகின்றனராம்.


நிக்ஜோனாசும் விவாகரத்து செய்வது தான் சரி என முடிவெடுத்துவிட்ட நிலையில், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும்  குறிப்பிட்டுள்ளது, அந்த அமெரிக்க ஊடகம்.

ஆசை அறுவது நாள், மோகம் முப்பது நாள்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சாங்க..  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();