Breaking News

'நேர்கொண்ட பார்வை' தலைப்பு 'விஜய்' பட போஸ்டரில் இருந்து சுட்டதா? கொளுத்தி போடும் விஜய் ரசிகர்கள்


விஜய் அஜித் ரசிகர்கள் இடையிலான இணைய சண்டையில், ஒருவர் மற்றொருவரின் படங்களை பற்றி குறை கூறிக்கொள்வதெல்லாம் சாதாரணமான ஒன்று.

தற்பொழுது ரசிகர்களுக்கு இது  ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்ட நிலையில், H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' பட தலைப்பு குறித்தும் விஜய் ரசிகர்கள் கொளுத்தி போட துவங்கியுள்ளனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் முதற்பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த தெறி பட போஸ்டரை பகிர்ந்து, 'நேர்கொண்ட பார்வை தலைப்பே, எங்க கிட்ட இருந்து சுட்டதுதான்' என சர்ச்சையை கிளப்ப துவங்கி இருக்கின்றனர்.


குறிப்பிட்ட போஸ்டரில், 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை; வாழ்வின் அடையாளம்' எனும் வரிகள் இடம்பெற்று இருந்த நிலையில் இப்படியொரு குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர் விஜய் ரசிகர்கள் சிலர்.

நல்லவேள புதுமை பெண்ணின் ஓனர், பாரதியார் இந்த கொடுமையெல்லாம் பாக்க இப்போ பூமில இல்ல...

தொடர்புடைய செய்திகள்

வெளியான 1 மணி நேரத்திலேயே சாதனை.. அசத்தும் நேர்கொண்ட பார்வை