Breaking News

காணாமல் போன 'நான் அவனில்லை' ஜீவன்... திகைக்க வைக்கும் காரணம்


'நா அவன் இல்லைங்க' என்கிற வசனத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஜீவன், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனதன் பின்னணியில் இருக்கும் காரணம் இப்பொழுது தெரியவந்துள்ளது.

யுனிவர்சிட்டி எனும் படத்தில் அறிமுகமாகி, காக்க காக்க, நான் அவனில்லை, திருட்டு பயலே என நெகட்டிவ்வான வேடங்களில் நடித்து அசத்தி இருந்தவர் நடிகர் ஜீவன்.

திரைத்துறையில் ஆரம்பத்தில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், திருட்டு பயலே திரைப்படத்திற்கு பின்பு படவாய்ப்புக்கள் வந்து குவிந்தது. என்றாலும் ஜோதிடத்தில் மிகவும் அதிக நம்பிக்கை கொண்டவரான இவர், அதிலேயே மூழ்கி விட்ட காரணத்தினால்,

இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சந்திக்க வரும் சமயங்களிலும் சொன்னபடி வீட்டில் இருக்காது, ஜோதிடரின் அறிவுரை படி கோவில், குளம் என சுற்ற துவங்கி விடுவாராம்.


ஒருகட்டத்தில் இவரை சந்திக்க முடிவது இல்லை என்ற நிலை வந்ததும், இயக்குனர்களும் கைவிட்டு விட, படவாய்ப்புகள் இன்றி திரைத்துறையில் காணாமல் போய் விட்டார்.  தற்பொழுது பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், 'ஜெயிக்கிற குதிர' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.