Saturday, 9 March 2019

ஹாலிவுட்டே கொண்டாடும் தமிழ் சிறுவன்... இந்தியாவையே பெருமை படுத்தி சாதனை


ஹாலிவுட் திரையுலகம் மற்றும் ஒட்டுமொத்த உலகையே தனது திறமையினால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் 'லிடியன் நாதஸ்வரன்' எனும் தமிழ் சிறுவன்.

சென்னையை சேர்ந்த 13 வயதே நிரம்பிய லிடியன், 'வொர்ல்ட்ஸ் பெஸ்ட்' எனும்  ஹாலிவுட் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். அதில் ஒரு நிமிடத்திற்குள் 325 முறை என, இதுவரை எவரும் எட்டிடாத வேகத்தில் பியானோ வாசித்து அசத்தினார்.


இவரது இந்த அசாத்திய திறைமையினால் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்களும் வாயடைத்து போயினர். இந்த நிகழ்வினை நமது ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான் உள்ளிட்ட பல இந்திய திரையுலகினர் பெருமையுடன் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். 

இது மட்டுமல்லாது கண்ணை கட்டிக்கொண்டு வாசிப்பது, ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களில் வெவ்வேறு இசையினை வாசித்து காட்டுவது என தொடர்ந்து தனது அசாத்திய திறமையினால் மிரள வைத்து வரும் இவர், உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிகழ்ச்சியாக கருதப்படும் 'தி எலன் ஷோ' விற்கு அழைக்கப்பட்டு, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் இந்திய இசைக்கலைஞர் எனும் பெருமையையும் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

கேலி, கிண்டல்களுக்கிடையேயும் சாதித்த கீர்த்தி சுரேஷ்... குவியும் பாராட்டுக்கள்

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();