Sunday, 17 March 2019

இனிமேல் அதற்கு நோ...! பட்டு திருந்திய கீர்த்தி சுரேஷ்


நடிகையர் திலகம் எனும் ஒரே திரைப்படத்தில் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

'இவ்வளவு திறமைய உள்ள வச்சிக்கிட்டு, ஹீரோக்களை சுத்தி சுத்தி வந்து டூயட் பாடி இருக்கு பாரேன்' என சினிமா ரசிகர்களை பேச செய்த அவர், மீண்டும் துண்டு துக்கடா வேடங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

நயன்தாரா, திரிஷாவின் ஆரம்பகால வழியை பின்பற்றுவதாக எண்ணி நாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடிக்காமல், முன்னணி நட்சத்திரங்களை உருகி உருகி காதலிக்கும் அழகு பதுமை வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அவருக்கு, சமீபத்திய படங்கள் பேரிடியாக அமைந்தது.

Also Read |  முன்னணி நடிகர்களுக்கு தைரியம் இல்லையா..? போட்டுத்தாக்கிய வரலட்சுமி 

சண்டைக்கோழி 2, சர்கார் என அடுத்தடுத்து வெளியான படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி ஸ்கோர் செய்ய, அந்த படங்களில் உப்புக்கு சப்பாணியாகவே பார்க்கப்பட்டது கீர்த்தியின் கதாப்பாத்திரங்கள்.


இதனால் 'இப்படியே போனால் சரிப்பட்டு வராது' என சுதாரித்து கொண்ட கீர்த்தி சுரேஷ், நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கின்றாராம்.

மேலும் மாடர்ன் மங்கை கதாப்பாத்திரங்கள் என்றால், யோசிக்காது கீர்த்தி சுரேஷ் நோ சொல்லிவருவதால், 'ஒரு வழியாக பட்டு திருந்திவிட்டார்' என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனராம் அவரது நல விரும்பிகள்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();