Breaking News

கைவிட்ட தல... காப்பாற்றிய தளபதி... உற்சாகத்தில் H.வினோத்


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டு படங்களில் தனது அசாத்திய இயக்குனர் திறமையை நிரூபித்துக் காட்டியவர் H.வினோத்.

இவ்விரு படங்கள் கொடுத்த பிரபலத்தையடுத்து, அஜித்திற்கு கதை கூற கிடைத்தது டபுள் ஓகே. இடையே போனி கபூர் நுழைய, சொந்த கதையை விட்டு, பிங்க் திரைப்பட ரீமேக்கை வேறு வழியின்றி இயக்கி கொண்டிருக்கிறார் வினோத்.

அஜித்தும், 'உங்கள் கதையில் அடுத்து நடிக்கிறேன்' என வாக்கு கொடுத்து விட்டு, பின்னர் வேண்டாமென நிராகரிக்க மேலும் மனமுடைந்து போனார் வினோத்.  சரி எல்லாம் தலைவிதி என விதியின் மேல் பழியை போட்டு நகர்ந்தவருக்கோ தற்பொழுது அடித்திருக்கிறது டபுள் ஜாக்பாட்.

அஜித் தான் நிராகரித்து விட்டார், சரி நடிகர் விஜயை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்ற முடிவோடு, விஜயை தொடர்ப்பு கொண்டு, கதையின் ஒன் லைனை மட்டும் கூற, இம்ப்ரெஸ் ஆன தளபதி 'தளபதி 63' படப்பிடிப்புகள் முடிந்ததும் வாருங்கள் முழுக்கதையையும் கேட்கிறேன் என இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இது ஒருபுறம் என்றால் இடையே சூப்பர் ஸ்டாரிடமும் ஒரு கதையை கூற, மிரண்டு போன சூப்பர் ஸ்டாரும் A.R. முருகதாஸ் படத்திற்கு அடுத்து உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என உறுதியளித்திருக்கிறாராம். 

இப்படி தல அஜித் நிராகரித்த சோகத்தில் இருந்தவருக்கு கிடைத்த மாபெரும் இரு பட வாய்ப்புகள் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.