Breaking News

அவர் படுத்தியது போதாதா.? சாய்பல்லவி வேற வரணுமா..? புலம்பிய A.L.விஜய்


பிரபல இயக்குனர் A.L  விஜய் நடிகை சாய்பல்லவியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரவிய தகவலை அடுத்து, தனது நட்பு வட்டாரங்களிடம் மனம் திறந்திருக்கிறார் அவர்.

முன்னதாக நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக உடனே விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு நடிகையுடன் திருமணம் என பரவிய தகவல் குறித்து, 'இன்னும் முதல் திருமணத்தில் ஏற்பட்ட காயமே ஆறவில்லை, அப்படி இருந்தும் நான் எப்படி, இன்னொரு நடிகையை திருமணம் செய்வேன்' என நட்பு வட்டாரங்களிடம் புலம்பி இருப்பதாக கிசு கிசுக்கின்றன சினிமா வட்டாரங்கள்.

மேலும், இது குறித்து தொடர்பு கொண்ட போது A.L. விஜயின் மேனேஜரும் திருமணம் குறித்த இந்த செய்தியை வதந்தி என மறுத்திருந்தார், என்பதும் குறிப்பிடத்தக்கது .