Breaking News

அஜித் இப்படி நம்ப வச்சி ஏமாத்திட்டாரே..? புலம்பும் இயக்குனர்


தனது எதிர்பார்பற்ற உதவிகளால் பலரையும் நெகிழ செய்த நடிகர் அஜித், முதன் முறையாக ஒரு இயக்குனரை புலம்ப வைத்திருக்கிறார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என தனது அடுத்த அடுத்த படங்களின் மூலம் ஒரு தரமான இயக்குனராக தன்னை நிரூபித்து காட்டியவர் H.வினோத்.

தற்பொழுது நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை எனும் ரீமேக் திரைப்படத்தினை இயக்கி வரும் இவர், முதலில் அஜித்திடம் கூறி இருந்ததோ தானே அஜித்திற்காக செதுக்கி வைத்திருந்த கதையை தான்.

அந்த கதையும் அஜித்திற்க்கு பிடித்துப் போய் நடிக்க ஒப்புக்கொண்ட சமயத்தில் தான், தயாரிப்பாளர் போனிகபூர் பிங்க் திரைப்பட ரீமேக்கில் நடிக்குமாறு அஜித்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

வேறுவழியின்றி, 'இந்த ரீமேக் படத்தை நீங்களே இயக்குங்கள், அடுத்ததாக உங்களது கதையிலும் நான் நடித்து கொடுக்கிறேன்' என்று வினோத்திற்கு உறுதியளித்தார் அஜித்.

துரதிஷ்டவசமாக, நடிகர் அஜித்திற்கு வினோத்தின் இயக்கத்தில் நடிப்பது சிவாவின் இயக்கத்தில் நடித்ததை போல வசதியாக இல்லாமல் போக, வினோத்தின், சொந்த கதையில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். 

இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிக்காட்டி கொள்ளாமல்,  நேர்கொண்ட பார்வை படப்பிடிப்புகள் தொடர்ந்தாலும், 'தன் கதையில் நடிக்கிறேன் என கூறிவிட்டு, அஜித் கடைசியில் மறுத்துவிட்டாரே' என நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பி வருகிறாராம் வினோத்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே வார்த்தையில் அஜித்தை அசிங்கப்படுத்திய நடிகை... கொலைவெறியில் ரசிகர்கள்