Breaking News

விஜய்க்கு இருக்கும் அக்கறை, அஜித்துக்கு இல்லையே.? வருந்தும் தமிழ் திரையுலகம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு இருக்கும் அக்கறை, அஜித்துக்கு இல்லையே என புலம்பி வருகின்றனர் தமிழ் சினிமா பணியாளர்கள்.

தமிழ் திரையுலகில் டாப் நட்சத்திரங்கள் என்றால் இப்பொழுது அஜித் மற்றும் விஜய் தான். கோடி கணக்கில் உருவாகும் இவர்களது திரைப்படங்களால் மட்டும், வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, நடிகர் அஜித் மட்டும் தன் படங்களை ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த வலியுறுத்தி வருகிறார். இதனால் தமிழ் திரையுலகை சார்ந்த பணியாளர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு குறைகிறது.


அஜித்தின் இந்த முடிவுகுறித்து, பெஃப்ஸி அமைப்பின் தலைவரான R.K செல்வமணி அவர்கள் கூட சென்ற வருடம் விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு 'தமிழகத்தில் படப்பிடிப்புகள் நடத்தினால் ரசிகர்களால் இடையூறு ஏற்பட்டு, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும்' என்ற காரணத்தினாலேயே ஆந்திராவில் நடத்த வலியுறுத்துவதாக பதில் அளித்திருந்தது அஜித் தரப்பு.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை உடைய நடிகர் விஜயும் அவரது படப்பிடிப்புகளை தமிழகத்தில்தான் நடத்துகிறார், ரசிகர்களால் இடையூறும் ஏற்படத்தான் செய்கிறது, என்றாலும் தமிழக ஊழியர்களின் மீது கொண்டுள்ள அக்கறையால் தொடர்ந்து அவரது படங்கள் தமிழகத்தில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜயை போல அஜித்தும், தமிழகத்தில் தன் படங்கள் படமாக்கப்பட வலியுறுத்தினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்துவருகின்றனர்  தமிழ் திரைப்பட ஊழியர்கள்.