Breaking News

அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்... ட்விட்டரில் மாஸ் காட்டும் சிகர்கள்


அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் எனும் தலைப்பு சமூக வலைத்தளமான டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது என்பது போல, சிவனேன்னு தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு, அரசியல் வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் அஜித்திற்கு அரசியல் அழைப்பு விடுத்து பரபரப்பை கிளப்பி இருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

இதற்கு முன்னதாகவே, ஓட்டுபோடுவதுதான் அரசியலுக்கும் தனக்கும் உள்ள ஒரே தொடர்பு என கருத்து தெரிவித்து, தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவு படுத்தி விட்டார் நடிகர் அஜித்.

Also Read | சும்மா இருக்குறவன வம்புக்கு இழுக்காதீங்க...! புலம்பும் தல 

ஆனால், ரசிகர் மன்றம் வேண்டாமென கூறியும் ரசிகர்கள் அவரை விடாது பின்தொடர்வது போல, அரசியல் வேண்டாம் என கூறிய அவரை அரசியல் விடுவதாக இல்லை.

இப்படியொரு உதவும் குணமும், அறிவும் நிறைந்த ஒரு நடிகர் தங்களுக்கு தலைவராக வரவேண்டும் என்பதே பலரது கருத்து. இது ஒருபுறம் இருந்தாலும், அஜித்தின் தீவிர ரசிகர்களோ, 'அவர்தான் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரே, அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவா இல்லை, எங்களுக்கு இந்த நடிகர் அஜித்தே போதும்' என கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமான பதிவுகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக  '#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்' முதலிடம் பிடித்துள்ளது.