Sunday, 17 March 2019

சும்மா இருக்குறவன வம்புக்கு இழுக்காதீங்க...! புலம்பும் தல


தன் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக நாளுக்கு நாள் நடிகர் அஜித்திற்கு அரசியல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அவரது உதவும் குணம், அறிவியல் அறிவு போன்ற வியக்க வைக்கும் குணாதிசயங்கள் இவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நமக்கு உதவுவார் என மக்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி அவர்களின் மறைவுக்கு பின்னர், தமிழகத்தை ஆழ தகுதியான அரசியல்வாதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை காரணமாக கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அரசியலில் களம் கண்டுவிட்டனர்.

நடிகர் விஜயும் தனது அரசியல் வருகையை சொல்லாமல் சொல்லி உறுதி படுத்திவிட்டார். இருப்பினும் சிவனே என்று, தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும், அஜித்தையும் அரசியலுக்கு அழைக்கின்றனர் ரசிக பெருமக்கள் மற்றும் திரையுலகினர்.

இந்த அரசியல் அழைப்புகளுக்கு, ஓட்டு போடுவதுடன் அரசியலுடன் தனக்கான தொடர்பு முடிந்துவிட்டது, என அதிகாரபூர்வமாக நோ சொல்லி இருந்தார் அஜித்.

Also Read | சரிந்த வேலி - காப்பாற்றிய விஜய்...! அதன் பின்னரும் நடந்த சுவாரஸ்ய சம்பவம்  

இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரனும், நேற்று நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்த சம்பவம் குறித்த பேச்சு ஓவர் நைட்டில் கோலிவுட் முழுவதும் பரவ, அஜித்தின் காதிற்கும் சென்று இருக்கிறது செய்தி.

அஜித்தும் வழக்கம் போல, 'சும்மா இருக்குறவன வம்புக்கு இழுக்காதீங்க எனும் பாணியில்', 'என்ன நடந்தாலும் அரசியலுக்கு சிம்ப்ளி நோ' என்றிருக்கிறார் தன் நட்பு வட்டாரங்களிடம்.

Disqus Comments
'