Monday, 25 March 2019

'ராதாரவி'யை தொடர்ந்து நயன்தாராவை விளாசிய 'சித்தார்த்' - விக்னேஷ் சிவன் பதிலடி


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, நடிகர் ராதாரவி தரக்குறைவாக பேசியதுதான் நேற்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஹாட் டால்க்.

இதனால் எழுந்த மாபெரும் சர்ச்சையினை தொடர்ந்து, நடிகர் ராதாரவி படவாய்ப்புகள், திமுக கட்சியில் உறுப்பினர் அந்தஸ்து ஆகியவற்றை இழந்து நிற்கிறார்.

இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நடிகர் சித்தார்த்தும் நயன்தாராவை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார். இப்பிரச்சனை குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்த சித்தார்த்,

'மீடூ' பிரச்னைகள் குறித்து பல நடிகைகள் புகார் அளித்தபோது ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் புகழ்பெற்ற ஒருவருக்கு பிரச்சனை என்றதும் பலர் பொங்கி எழுந்திருப்பதை காண்கிறேன்.

துணிச்சல் என்பது, தனக்கு ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் பேசுவது  அல்ல, பிறருக்கும் நிகழும் போதும் குரல் கொடுப்பதுதான்' எனக்கூறி நயன்தாராவை மறைமுகமாக சாடி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன், பேசினால் மட்டும் தான் குரல் கொடுக்கிறார் என்றில்லை. பெண்களுக்கெதிரான அநீதிகளுக்கு அவர் எப்பொழுதுமே எதிராகத்தான் நின்றிருக்கிறார்' என பதிலடியும் கொடுத்திருந்தார்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();