Wednesday, 27 March 2019

எப்படி இருந்த சங்கவி, இப்படி ஆகிட்டாரே..? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்


அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் இப்போதைய லெஜெண்ட்களுடன் 90 களில் ஜோடி போட்டு, தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை சங்கவி.

90 களில் தமிழ், தெலுங்கு மலையாளம் என 100 படங்களுக்கு மேல் நடித்து, பிரபலமாக வலம்வந்தவர் இப்பொழுது திருமணம் செய்து கொண்டு கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.

2005ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர், அதன் பிறகு வாய்ப்புகள் குறைய என்ன ஆனார் என தெரியாத அளவிற்கு திடீரென மாயமானார்.

இதற்கிடையே கடந்த 2016ம் ஆண்டு, சாப்ட்வெர் என்ஜினீயர் ஒருவரை தனது 39வது வயதில் திருமணம் செய்து கொண்ட இவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக இப்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.



A post shared by Actress Sangavi (@sangavivenkatesh) on


உடல் எடை அதிகரித்து, 'சிறு வயதில் பார்த்து ரசித்த நடிகையா இது?'  என அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறிப்போன இவர், கொளஞ்சி எனும் தமிழ் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();