Breaking News

பட்டும் திருந்தலையா? மீண்டும் நடிகையை மடக்கிய விவாகரத்து இயக்குனர்


பிரபல இயக்குனர் ஒருவர் இளம் நடிகையை மணக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தான் இயக்கும் படங்களில், குடும்ப உறவுகளை மையப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் குறிப்பிட்ட இயக்குனர். இவர் அறிமுகம் செய்யும் குழந்தை நட்சத்திரங்களும் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார்கள்.

இப்படி இருக்க நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்றாலும் ஓராண்டு கூட திருமண பந்தம் நீடிக்கவில்லை. விவாகரத்து செய்த வேகத்தில், 'இனிமேல் இந்த நடிகைகளின் சகவாசமே வேண்டாம்' என புலம்பி தள்ளி இருந்த இயக்குனர் மீண்டும் ஒரு நடிகையிடம் காதல் வலையில் விழுந்திருக்கிறாராம்.

சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட குறிப்பிட்ட நடிகையை வைத்து பிளாப் படம் ஒன்றை இயக்கி இருந்தார் நம் காதல் மன்னன். படப்பிடிப்பில் இயக்குனரின் அன்பை கண்டு உருகிய கல்நெஞ்சு நடிகையும், அவரை காதலிக்க துவங்கியிருக்கவே, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.