Breaking News

ஒரே வார்த்தையில் அஜித்தை அசிங்கப்படுத்திய நடிகை... கொலைவெறியில் ரசிகர்கள்


நடிகர் அஜித்திற்கு தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பிரபலம் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏன் பாலிவுட்டிலும் அவரது புகழ் கொடிகட்டி பறக்கிறது.

இப்படி பட்ட புகழ்மிக்க நடிகரைப் பற்றி தெரியாது என்று கூறினால், அவரது ரசிகர்களின் மன நிலையை பற்றி கொஞ்சம் நினைத்து பாருங்கள். ஆம் இப்படி ஒரு பதில் அளித்த நடிகையை சமூக வலைத்தளங்களில் தாளித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

நடிகர் விஜயுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். 10வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தற்பொழுது, சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.


இத்திரைப்படம் குறித்து பேசிய அவர், சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளினார். மேலும் நடிகர் அஜித் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டார்.

அதாவது, 'அஜித் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது' என்ற அவரது பதிலினால், தமிழ் சினிமா பற்றி கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார் என புரிந்துகொள்ள செய்தார்.

என்றாலும் இதனை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள், தமிழ் சினிமா பற்றி முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள் பின்பு நடிக்கலாம் என வறுத்தெடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

வெளியான 1 மணி நேரத்திலேயே சாதனை.. அசத்தும் நேர்கொண்ட பார்வை