Breaking News

'90ml' ஓவியா மாதிரி ஆக நினைச்சா இதுதான் கதி...! சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து


பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், அரசியல் செல்வாக்கு படைத்த கும்பலுக்கு இரையான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் குலைநடுங்க செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டி என்னதான் ஒரு புறம் போராட்டங்கள் நடந்து வந்தாலும், காவல்துறையின் நடவடிக்கைகள் குற்றவாளிகளை காக்கும் படி இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. 

அதே சமயம், இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க பாதிக்கப்பட்ட பெண்களின் நடவடிக்கைகளே காரணம் என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Also read | இதுக்கு மட்டும் பேச வர மாட்டீங்களே..? சின்மயியை வறுத்தெடுத்த இணையவாசிகள் 

'ஆபாச உடைகள் அணியாதீர்கள், தெரியாத ஆண் நபர்களிடம் பேசாதீர்கள் என பெற்றோர்கள் தலையில் அடித்துக் கொண்டாலும் கேட்பதில்லை. இது மாடர்ன் உலகம், நாங்கள் ஆண்களுக்கு சமம், 90ml ஓவியா போல வெளிப்படையாக பேசுவோம், சரக்கு, தம்மு, கஞ்சா அடிப்போம்.

ஜாலிக்காக உறவு வைத்து கொள்வோம், என்றெல்லாம் ஆடினால் பாதிக்கப்பட்ட 200 பெண்களின் கதிதான்' எனவும் கடுமையான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

ஒரு புறம் இந்த கருத்துக்கள், பெண்களை மட்டம் தட்டும்படி இருந்தாலும், மேற்கத்திய கலாச்சாரத்தை நாட விரும்பும் பெண்கள், மேற்கத்திய நாடுகளை போல சாமானிய மக்களுக்கு இங்கே நீதித்துறை தோள் கொடுப்பதில்லை என்பதனை புரிந்து கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாது உண்மை.