Breaking News

நடிகர் அஜித்தை கலாய்த்த சிம்புவின் தம்பி... கொலைகாண்டில் அஜித் ரசிகர்கள்


நடிகர் அஜித்திற்கு இயக்குனர் சுசீந்திரன் அரசியல் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை கலாய்த்து, சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகர் சிம்புவின் சகோதரரான 'குறல் அரசன் (kural arasan)..... சாரி, குரான் அரசன் (kuran arasan).

வெண்ணிலா கபடிக்குழு, ஆதலால் காதல் செய்வீர் போன்ற திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன் நேற்று, நடிகர் அஜித்தினை அரசியலில் களம் இறங்க கோரி பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இது குறித்து தனது, பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த T. ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் குரான் அரசன், 'இவர் வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு, எங்க அப்பா தான் அடுத்த முதல்வர்' என வம்படியாக வந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.



மேலும் சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடி செய்கிறாரா என ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு, தீபா பேரவை கட்சியோடு கூட்டணி வைத்து எங்கள் தந்தையின் லட்சிய திமுக, 234 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் கருத்து தெரிவித்து பலரது கேலி கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறார்.