Breaking News

200 பெண்கள் சீரழிப்பு..! எங்கம்மா அந்த மரணமட்டை ஓவியா..?


பொள்ளாச்சியில் நிகழ்ந்த கற்பழிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையே நிலை குலைய செய்துள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஓவியா வாய் திறக்காமல் இருந்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

90ml எனும் புரட்சிகர படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், பெண்கள் சரக்கு, தம்மு, கஞ்சா, அடிக்கலாம், ஜாலியாக உறவு வைத்து கொள்ளலாம் தப்பில்லை என்ற இன்றியமையாத கருத்தினையும் இத்திரைப்படத்தின் வாயிலாக எடுத்துரைத்தார்.

விமர்சனம் செய்தவர்களையும் சக்கட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளி, பெண்ணியம் பேசினால் தவறா என கொதித்தெழுந்துவிட்டார். இப்படி பட்ட திடீர் பெண்ணியவாதியான ஓவியா, 90ml பட ப்ரமோஷன்கள் முடிந்த கையோடு பெண்ணியம் பேசுதலையும் கைகழுவி விட்டார் போல.

Also read | "200 பெண்கள் சீரழிய நீங்க தான் காரணம்" சிம்புவை தாளித்து எடுக்கும் மக்கள் 

இந்தியா முழுவதும் பல சினிமா பிரபலங்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஓவியாவோ இன்று வரை சிறு கருத்து கூட தெரிவிக்காதது, மாடர்ன் பெண்ணியவாதிகளை வருத்தப்பட வைத்துள்ளது.