Tuesday, 5 February 2019

தலைவருக்கே கிடைக்காத பெருமை..! தட்டி தூக்கிய தல


தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத பெருமையை பெற்றிருக்கிறது நடிகர் அஜித்தின் விஸ்வாசம்.

பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி, வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக விஸ்வரூபம் எடுத்தது சிவா இயக்கத்தில் உருவானது விஸ்வாசம்.

இப்படி தமிழக பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்த விஸ்வாசம், முதன் முதலாக கன்னடத்தில் டப் செய்யப்படும் பிரமாண்ட திரைப்படம் என்ற பெருமையையும் பெற இருக்கிறது.

நேரடியாக தமிழில் வெளியான விஸ்வாசத்திற்கு கர்நாடகவில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டால் கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடையும் என எண்ணிய விநியோகஸ்தர்கள் 'ஜகா மல்லா' எனும் பெயரில் விஸ்வாசத்தினை விரைவில் வெளியிட உள்ளனர்.



இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், விஸ்வாசத்துடன் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்ற தலைவரின் 'பேட்ட' திரைப்படத்திற்கே இந்த பெருமை கிடைக்காததுதான்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();