Breaking News

குத்து சண்டையிடும் 'தல,தளபதி'... ரசிகர்கள் செய்த அலப்பறையை பாருங்க


ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானவர்கள் தல, தளபதி ரசிகர்கள். சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருந்தும், நிஜ வாழ்வில் அஜித், விஜய் நட்பு பாராட்டிவரும் நிலையில், ரசிகர்களோ நீ பெருசா, நான் பெருசா என ஒரு பனிப்போரையே நிகழ்த்தி வருகின்றனர்.

இப்படி தாங்கள் மோதியது பத்தாதென்று தற்பொழுது, தல, தளபதியையும் டிஜிட்டல் உலகில், முட்டி மோதிக்கொள்ள வைத்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.  

'WWE' எனும் குத்துசண்டை போட்டிகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள வீடியோ கேம் ஒன்றை, இதற்கு உபயோகப்படுத்தி இருக்கும் ரசிகர்கள், அஜித் மற்றும் விஜய் போன்று தோற்றமளிக்கும் வீரர்களை உருவாக்கி, இருவரையும் சண்டையிட வைத்து  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு,  அதன் கமெண்ட் பகுதியில் தாங்கள் சண்டை இட்டு வருகின்றனர்.  
இப்படிப்பட்ட ரசிகர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள், குறிப்பிட்ட நடிகர்களின் காதிற்கு சென்றும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், ரசிகர்களை மோதவிட்டு அமைதி காப்பதுதான், திரையுலகினரின் புரியாத புதிர்.