Breaking News

கொளுத்திப்போட்ட பார்த்திபன்... பற்றி எரியும் விஜய் சேதுபதி வீடு...?


நல்லா இருந்த விஜய் சேதுபதியின் வீட்டில் பிரச்சனை தீயை கொளுத்திப்போட்டு இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது 96. இந்த திரைப்படத்தின் 100 நாள் விழா கொண்டாட்டங்கள் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் பார்த்திபன், '96' திரைப்படத்தில் தான் இருவரும் கடைசிவரை ஒரு சிறிய ஹக் கூட செய்து கொள்ளாமல், ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள். ஆனால் ரசிகர்கள் விரும்பிய அந்த திரைப்பட கிளைமேக்ஸை நிகழ்த்த, எங்களுக்காக கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்.


பார்த்திபனின் இந்த வேண்டுகோளை ஏற்று, ராம், ஜனனியாக இருவரும் கட்டிபிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். இது ஒருபுறம் இருக்க, பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவத்தினால், விஜய் சேதுபதியின் வீட்டில் பிரச்சனை வெடித்திருப்பதாக கிசு கிசுக்கிறது சினிமா வட்டாரங்கள்.