Breaking News

'அவனுங்கள மட்டும் நம்பாதீங்க!' மேடையில் விளாசல்! யாரை சீண்டுகிறார் விஜய் சேதுபதி?


நடிகனாக மட்டுமல்லாது தனது சமூக நல கருத்துகளினாலும் மக்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் அண்மையில் சாதி மத வெறியர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், வழக்கம் போல ரசிகர்களை கவரும் படி கலகலப்பாக பேசி இருந்தார். இடையே அரசியல் குறித்தும், தான் சந்தித்த அய்யப்பன் கோவில் சர்ச்சை குறித்தும் பதிலளிக்கும் விதமாக பேச துவங்கினார்.

அதில், எப்பொழுதும் நாட்டுக்கு ஒரு பிரச்சனை, நண்பனுக்கு ஒரு பிரச்சனை என வருபவர்களோடு சேருங்கள். நம் ஜாதிக்கு ஒரு பிரச்சனை, நம் மதத்துக்கு ஒரு பிரச்சனை என வருபவரை நம்பி களத்தில் இறங்காதீர்கள்.

ஏனென்றால், 'உங்களை தூண்டிவிட்டுவிட்டு அவர்கள் சொகுசாக போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் அமர்ந்து கொள்வார்கள். ஆனால் நாம் தான் பிரச்சனையில் மாட்டிக்கொள்வோம்' என்பதை புரிந்துகொள்ளுங்கள், என ஜாதி மதத்தினை வைத்து அரசியல் செய்பவர்களை விளாசி தள்ளி இருந்தார்.