Sunday, 10 February 2019

'H.ராஜா & கோ'வை மீண்டும் சீண்டும் தளபதி


H.ராஜா & கோ, நடிகர் விஜய் ஒரு கிரிஸ்துவர் அவர் முழு பெயர் 'ஜோசப் விஜய்' என ஆதார்கார்டுடன் பதிவிட்டு கிளப்பிய சர்ச்சை நினைவிருக்கலாம்.

அவர் ஒரு கிறிஸ்துவர் எனும் காரணத்தினாலேயே, இந்துத்துவ கட்சியான 'பாஜக' வை விமர்சிப்பதாக குறிப்பிடும் வகையில், இப்படியொரு சர்ச்சையை கிளப்பி இருந்தார் ராஜா.

அதனை தொடர்ந்து, விஜய் வெளியிட்ட அறிக்கையிலும், ஜோசப் விஜய் என குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இப்படி தனது இயற்பெயருக்கே இம்புட்டு அலப்பறைகளை கொடுத்த, எதிர்மறை விமர்சகர்களுக்கு மத்தியில், தனது 63 வது படத்தின் தலைப்பை, 'மைக்கேல்' எனும் கிறிஸ்துவ பெயராக வைக்க ஒப்புதல் அளித்து இருக்கிறாராம் நடிகர் விஜயின் தரப்பு.  


இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 'H.ராஜா & கோவின் ரியாக்சன் என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டால்க். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();