Breaking News

வைரமுத்துவுக்கு வணக்கம் வச்சது குத்தமா..? சின்மயியால் சிக்கலில் சூப்பர்ஸ்டார்


திரையுலகை சார்ந்த, சாராத பெண்கள் பலர் வைரமுத்து அவர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பியவர் பாடகி சின்மயி.

அதனை தொடர்ந்து பலரது பெயர் அடிபட்டாலும், இன்றுவரை நின்று பேசும் சம்பவமாக வைரமுத்து விவகாரம் அமைந்து விட்டது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், தற்பொழுது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த 'இளையராஜா 75' இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து அவர்களுக்கு, நடிகர் ரஜினி காந்த், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வணக்கம் சொல்லி வரவேற்றனர்.

இந்த நிகழ்வின், காணொளியை பகிர்ந்துள்ள சின்மயி, பாலியல் குற்றவாளியை சமூகம் மரியாதையோடு நடத்துவதாக சமூக வலைதளப்பதிவு ஒன்றினை வெளியிட்டு விவாதப்பொருள் ஆக்கி இருக்கிறார்.


என்றாலும் இதற்கு நாசுக்காக, நீங்கள் மட்டும் அவரை திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம், ஆனால் அவரை ஒரு திரைத்துறை கலைஞராக இவர்கள் வரவேற்க கூடாதா..? என  நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.