Breaking News

ஆணவத்தில் ஆடும் இசையமைப்பாளர்கள்... புலம்பும் திரையுலகினர்


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் நடவடிக்கை விரும்பத்தகுந்ததாக இல்லை என புலம்பி வருகின்றனர் இயக்குனர்கள்.

இந்த சர்ச்சையில் பெரும்பாலானோர் குற்றம் சாட்டுபவர்களாக, நடிகரான இசையமைப்பாளர், சாதிய இயக்குனரின் பேவரைட் இசையமைப்பாளர், வாரிசு இசையமைப்பாளர் என மூவரின் பெயர் அடிபடுகிறது. 

இதில் முதல் இரண்டு இசையமைப்பாளர்கள் தன்னை எந்த விஷயமாக, எவ்வளவு முக்கியமான விஷயமாக திரையுலகினர் சந்திக்கவந்தாலும் வீட்டின் உள்ளே கூட விடுவதில்லையாம்.

வாசலில் வைத்தே எத்தனை மணி நேரமானாலும் பேசி முடித்து அனுப்பி விடும் இவர்களின் செயல்களினால் முகம் சுளிக்கின்றனர் திரையுலகினர்.

இதில் மூன்றாவது இசையமைப்பாளர் வேற லெவல், இவரை வீட்டு வாசலில் சந்திக்கும் வாய்ப்பு கூட பலருக்கு கிடைப்பதில்லையாம், அப்படியே கிடைத்து படத்தில் புக் ஆகிவிட்டாலும், இசையமைத்து கொடுப்பதற்குள் படாதபாடு படுகிறார்களாம் படக்குழுவினர்.