Breaking News

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது..! SPB அதிரடி


ஆந்திராவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில், பாடகிகள், நடிகைகள்  கவர்ச்சி உடை அணிவது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார் பாடகர் S.P.பாலசுப்ரமணியம்.

அதில், 'சமீபகாலமாக பாடகிகள், நடிகைகள் மேடைநிகழ்ச்சிகளில் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு ஆபாச உடை அணிந்து தோன்றுகிறார். பொதுவிழாக்களில் எப்படி தோன்றவேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை.

இப்படி கவர்ச்சி உடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்தால்தான், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படவாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்கள் என்னமோ?' என்ற கருத்துக்கள் இடம் பெற்று இருந்தது.


இதற்கு ஆந்திராவிலும், தமிழகத்திலும் பலர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எந்த உடை அணிவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம், இந்த கருத்திற்கு SPB அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல அமைப்புகள் எதிர்ப்பு கொடியை காட்டி இருந்தன.

ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு பதிலடியாக, 'நான் சொன்ன கருத்தில் நிலைப்பாடாக இருக்கிறேன், எந்த வித மாற்றமும் இல்லை, இதனால் எவரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது' என ஒரே போடாக போட்டிருக்கிறார்.