Thursday, 7 February 2019

'செல்பி போராளி' சிவக்குமார் இஸ் பேக் - வைரலாகும் புதிய வீடியோ


எப்பேற்பட்ட மாமனிதர்களையும், அவர்கள் சேர்த்து வைத்த புகழையும் நொடிப்பொழுதில் அழிக்கும் வல்லமை படைத்தது, அவர்களது ஆணவம். இதற்கு வாழும் சான்றாக அமைந்தவர் தான் நடிகர் சிவகுமார்.

மதுரையில் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த சிவகுமார், தனது அனுமதி இன்றி புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபரின் மொபைல் போனை தட்டிவிட்டார்.

சிவகுமாரின் இந்த சர்ச்சையான நடவடிக்கை வீடியோ, நொடிப்பொழுதில் வைரல் ஆக, டன் கணக்கில் வந்து குவிந்தன எதிர்ப்புகள். இதுவரை தான் செய்த நல்ல விஷயங்களையும் மக்கள் மறந்துபோகும் அளவிற்கு, கெட்டபெயரை இந்த நிகழ்வு பெற்றுத்தரவே, தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டதுடன், தான் தட்டிவிட்ட செல்போனுக்கு பதிலாக புதிய செல்போனும் வாங்கிக்கொடுத்தார் அவர் .

இந்த  நிகழ்வு ஏற்படுத்திய ரணமே, சிவகுமாருக்கு ஆறியிருக்க வாய்ப்பில்லை எனும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கி இருக்கிறது ஒரு புதிய வீடியோ.

இம்முறை திருமண நிகழ்ச்சிக்கு வரும் சிவகுமாருடன், ஒரு நடுத்தர வயதான நபர் செல்பி எடுக்க முயல, பிறகு நடந்தது என்னமோ, மதுரையில் நடந்த நிகழ்வின் செராக்ஸ் காப்பி தான்.

அப்படி செல்போனை,  தட்டி விட்டுவிட்டு, முகத்தில் நீங்கா போலி புன்னகை உடன் முன்னேறி செல்லும் சிவகுமாரை பார்க்கையில், ;ஒட்டுமொத்த தமிழ் சினிமா வில்லன்களை மிஞ்சி விட்டார் போங்க', என நினைக்க தோன்றுகிறது (அப்படியொரு வில்லத்தனம் மனுஷன் முகத்தில்). 

என்னதான் இப்பொழுது வைரலாக துவங்கி இருந்தாலும், குறிப்பிட்ட வீடியோ சமீபத்தில் நிகழ்ந்த ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை சமீபத்தில் நடந்த ஒன்றாக இருந்தால், ஐயம் வேறு சாரி சார், நீங்கள் புத்தகங்கள் படித்தும், யோகா செய்தும் எந்த புண்ணியமும் இல்லை.  



Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();