Breaking News

தொடரும் 'கேலி - கிண்டல்கள்'.... சிம்புவின் புதிய சபதம்


சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

அதே சமயம், தொப்பையுடன் இருக்கும் நடிகர் சிம்புவை ஒரு தரப்பினர் படுபயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். அவரை கலாய்த்து மீம்ஸ்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதனால் வேறுவழியின்றி, உடல் எடையை குறைப்பது எனும் முடிவிற்கு வந்திருக்கிறாராம் நடிகர் சிம்பு. இதன் விளைவாக, கடந்த 3ம் தேதி துவங்க இருந்த, வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்பட படப்பிடிப்பை தள்ளிவைத்து விட்டு பேங்காக் பறந்துவிட்டாராம் சிம்பு.

அங்கே தீவிர உடல் எடைக்குறைப்பு பயிற்சியில் ஈடுபட இருக்கும் அவர், ஒருமாதம் கழித்து, 'வந்தா ஒல்லியாதான் வருவேன்' என சபதத்தையும்  இட்டு சென்றிருக்கிறாராம்.