Friday, 1 February 2019

பேச்சை மதிக்காத ரசிகர்கள்..! படாதபாடு பட்ட சிம்பு..!


மிகுந்த பரபரப்புக்கு பின் உலகம் முழுவதும், 'சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாலை காட்சியை, தியேட்டரில் ரசிகர்களுடன் பார்க்க சென்ற சிம்பு படாத பாடு பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இன்று காலை, சென்னை ரோகினி திரையரங்கின் ரசிகர்கள் காட்சி வழக்கம் போல, மேல தாளங்கள், ரசிகர்களின் பிரமாண்ட கொண்டாட்டம் என கலைகட்டி இருந்தது.


அப்பொழுது, தியேட்டருக்குள் வர முயன்ற சிம்புவின் காரை வழிமறித்த ரசிகர்கள், அவரை புகைப்படம் எடுக்க துவங்கினர். கொஞ்சம் வழிவிடுங்கள் தியேட்டருக்குள் சந்திக்கிறேன் என, அவர் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டும் எவரும் கேட்பதாக இல்லை.

இதனால் வேறு வழி இன்றி, கூட்ட நெரிசலுக்குள் பாதுகாவலர்கள் உதவியோடு படாத பாடுபட்டு தியேட்டருக்குள் சிம்பு நுழைந்து, தனது திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();